Adultery பிளாக் DAbandoned

#21

அருமை
வாழ்த்துக்கள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

Good Update Bro
Keep Rocking
Like Reply
#23

07

மாதங்கள் உருண்டோடின...

ஒவ்வொரு குடும்பமாக D பிளாக்கில் குடியேற ஆரம்பித்தனர். அந்த அமைதியான புதிய குடியிருப்பு பகுதி இப்போது ஒவ்வொரு கதவின் பின் மனிதர்களின் ரகசியங்களோடு உயிர்பெறத் தொடங்கியிருந்தது. மீரா தன் குடும்பத்துடன் ஒருபுறம் குடியேற, கீதாவும் அருணும் தங்கள் வாழ்வின் இறுதி நாள்களின் நினைவுகளுடன் அந்த வீட்டின் அரவணைப்பைத் தேடி வந்தனர். ஸ்ருதியும் ராஜேஷும், அனிதாவும் கார்த்திக்க்கும், தினம்சும் ரம்யாவும் தங்கள் வாழ்க்கையின் இரட்டை முகங்களோடு அங்கே அடியெடுத்து வைத்தனர்.

இந்த பரபரப்பான சூழலில், காட்வின் மற்றும் டயானாவின் திருமண நாளும் வந்தது.

பெற்றோரின் அழுத்தமும், உயிர் போய்விடும் என்ற மிரட்டலும் காட்வினை வேறு வழியின்றி சம்மதிக்க வைத்திருந்தது.

பாரம்பரிய முறைப்படி திருமணம் அவர்களது ஊரில் நடந்தது. ஓரிரு நாளில் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக ரிசப்ஷனும் நடந்து முடிந்தது. சென்னை போய் எல்லாம் பார்த்துக்கலாம் என திருமண நாளில் சமாளித்திருந்தான் கா‌ட்வின்.

ரிசப்ஷன் முடிந்த நாளில், ஹோட்டல் அறையில் டயானாவின் முகத்தில் ஒரு பெண்ணுக்கே உரிய இயல்பான வெட்கமும் புன்னகையும் மின்னியது. இயற்கையின் மலரைப் போல வாடாத சிரிப்போடு, அவளது உலகத்தில் காட்வின்தான் இனி எல்லாமே என்ற தூய நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.

ஆனால், அந்த ஆடம்பரமான ஹோட்டல் அறையின் கதவுகள் மூடியபோது, அங்கே காதலுக்கு இடமில்லை; ஒரு பயங்கரமான மௌனமும் பதட்டமும் மட்டுமே அறை முழுவதும் குடிகொண்டிருந்தது.

காட்வின் பாத்ரூம் செல்ல, டயானா வெட்கத்துடன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளது இதயம் வேகமாகக் துடித்துக்கொண்டிருந்தது. ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கம், கணவனின் முதல் ஸ்பரிசம் என்று கற்பனைகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பாத்ரூமிலிருந்து வெளியே வந்த காட்வின், தன் முகத்தைக்கண்ணாடியில் பார்க்கவே தயங்கினான். அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவனது கைகள் லேசாக நடுங்கின. அவன் நேராக கட்டிலின் அருகில் வந்தான்.

டயானா மெலிதாகத் தன் முகத்தை நிமிர்த்தி, ஒரு வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனைக் பார்த்தாள்.

ஆனால், காட்வினின் பார்வை நிலைகுத்திப் போய்விட்டது. ஒரு பெண்ணின் அருகில் நிற்பதே அவனுக்குப் பயங்கரமான மூச்சுமுட்டலைத் தந்தது. அவன் அவளைத் தொடுவது இருக்கட்டும், அவளது கண்களை நேராகப் பார்ப்பதற்கே அஞ்சினான்.

"காட்வின்... என்ன ஆச்சு? ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல..." என்று தன் மென்மையான குரலில் கேட்டாள் டயானா.

அவளது குரலில் இருந்த அந்த இயல்பான அக்கறை காட்வினின் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போலிருந்தது.

காட்வின் வேகமாகப் பின்னோக்கி நகர்ந்து, தன் தலையைத் தன் கைகளால் பிடித்துக்கொண்டான். "இல்லை... ஒண்ணுமில்லை டயானா. எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு. ஏகப்பட்ட கூட்டம்..." என்று கரகரப்பான குரலில் சொன்னான்.

"பரவாயில்லைங்க... ரெஸ்ட் எடுங்க," என்று சொல்லிக்கொண்டே டயானா அவன் அருகில் வந்தாள்.

காட்வின் சட்டென்று பின்வாங்கினான்.

அந்த விலகுதல் அறையில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

டயானா திகைத்துப்போய் நின்றாள்.

"காட்வின்... நான் ஏதோ தப்பா பண்ணிட்டேனா?" என்று அவள் பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

"என்னைத் தப்பா நினைச்சுக்காத. எனக்கு உடம்பு சரியில்லை. இன்னைக்கு என்னால எதுவும் முடியாது, தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாத... நான் தூங்கணும்," என்று வேகவேகமாகச் சொன்னவன், திரும்பிப் பார்க்காமல் போர்வையை எடுத்துக்கொண்டு சோபாவை நோக்கி நடந்தான்.

அவன் கட்டிலில் படுக்கக் கூட விரும்பவில்லை. ஹோட்டல் அறையின் மூலையில் இருந்த அந்தச் சோபாவில் அப்படியே சுருண்டு படுத்துக்கொண்டான்.

டயானா கட்டிலில் தனித்து அமர்ந்திருந்தாள். அவளது நெஞ்சில் ஒரு கனத்த பாறை வந்து உட்கார்ந்ததைப் போலிருந்தது. தன் கணவன் தனக்கு அருகில் வரவில்லை என்பது மட்டுமல்ல, குறைந்தபட்சம் தன் கையைத் தொட்டு ஆறுதல் கூடச் சொல்லவில்லை என்ற உண்மை அவளைச் சுட்டெரித்தது.

"நான் ஏதோ தவறு செய்துவிட்டேனா? என்னை ஏன் அவருக்குப் பிடிக்கவில்லை? என் தோற்றத்தில் ஏதாவது குறை இருக்கிறதா? அல்லது என்னிடம் ஏதோ தவறு இருக்கிறதா?" என்று கேள்விகள் அவளது மண்டைக்குள் ஓயாமல் சுழன்றடித்தன.

அவளது கண்கள் கலங்கின. கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கியது.

வசதியான குடும்பப் பின்னணி இல்லையென்றாலும், இயற்கையின் மடியில் எந்தவிதக் கவலைகளும் இன்றிப் பூவைப் போல வளர்ந்த அந்த அப்பாவிக் குழந்தையின் வாழ்க்கையில், இப்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி பூதாகரமாக வந்து நின்றது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, அந்தச் சொகுசு ஹோட்டல் அறையில் தன் கணவன் தனக்கு அருகில் இருப்பான் என்று நம்பியவளுக்கு, அவன் காதா தூரத்திற்கு அப்பால் சோபாவில் முடங்கிக்கிடப்பதைப் பார்த்தபோது இதயம் நொறுங்கிப் போனது.

இது உண்மையிலேயே அவனுக்கு ஏற்பட்ட ஒரு சாதாரண உடல் சோர்வுதானா? அல்லது அறியாத வயதில் அவனைப் பற்றிய முழு விவரமும் தெரியாமல் அவசரப்பட்டு இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து, தன் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டோமா?

ஒருவேளை, மாற்று இயற்கையை நேசிக்கும் வேறு ஏதேனும் ஒரு பெண்ணை அவன் தன் உயிருக்கும் மேலாகக் காதலித்திருப்பானோ? அவனது பெற்றோர் அந்தப் பெண்ணை ஏற்க மறுத்து, கட்டாயப்படுத்தித் தன்னை கல்யாணம் செய்து வைத்து விட்டார்களோ? தன் இதயத்தில் வாழும் அந்தக் காதலியின் நினைவுகளாலும், அவள் மீது கொண்ட மாறாத ஆசையாலும்தான், தன் தொடுதலைக் கூட அருவருத்து என்னை ஏற்க மறுக்கிறானோ?

அல்லது என் எளிய தோற்றமும், கிராமத்து நளினமும் அவனது ஆடம்பர உலகத்திற்குப் பொருந்தவில்லையோ? என் மேல் அவனுக்குக் கொஞ்சமும் ஈர்ப்பு வரவில்லையா? பிறந்தது முதல் என்னை ஒரு பூவைப் போலத் தாங்கி வளர்த்த என் பெற்றோர், என் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்று நம்பிதானே என்னை இந்த மாளிகைக்குள் அனுப்பி வைத்தார்கள்... ஆனால், இந்த முதல் இரவிலேயே என் கணவனின் நெஞ்சில் எனக்கு இடமில்லை என்பதை உணர்ந்து நான் எப்படி வாழப்போகிறேன்?

Namaskar
இரவோவியன்
[+] 3 users Like iravoviyan's post
Like Reply
#24

Awesome
Like Reply
#25

08

நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் வேகமாகக் கடந்து கொண்டிருந்தன.

அந்த 'Block-D' குடியிருப்பில் புதிதாகக் குடியேறிய குடும்பங்களுக்கு இடையே இயல்பான ஒரு அண்டை வீட்டு நட்பு இன்னும் முழுமையாக உருவாகவில்லை.

மீராவைத் தவிர மற்ற பெண்கள்—ஸ்ருதி, அனிதா, ரம்யா—அவ்வப்போது தங்களின் கணவன்மார்களின் பிறரைப் பற்றிய குறைகளைப் பற்றிப் பேசிப் புலம்புவதையும், அவர்களின் ஆடை வடிவமைப்பு, மற்றும் பழக்கவழக்கங்களைக் கேலி செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

அபார்ட்மெண்ட் வழிகளில் சந்தித்துக் கொள்ளும்போது ஒரு செயற்கையான "ஹாய்", "பாய்" என்ற புன்னகையோடு முடித்துக் கொண்டார்களே தவிர, ஆழமாக யாரும் யாருடனும் பழக முயலவில்லை.

ஆனால், இந்த இடைவெளிக்கு நடுவே மீராவும் கீதாவும் மெதுவாக ஒருவரையொருவர் நெருங்கத் தொடங்கினர். கீதாவின் அமைதியான குணமும், அவளது முகத்தில் நிழலாடிய ஒரு மெல்லிய சோகமும் மீராவின் கவனத்தை ஈர்த்தன.

ஒரு நாள் தற்செயலாக அருணுக்கு இருக்கும் அந்தத் தீவிரமான உடல்நலக் குறைபாட்டைப் பற்றியும், அவனது ஆயுள் வெகு சில மாதங்கள் மட்டுமே என்பதைப் பற்றியும் கீதா கண்ணீருடன் மீராவிடம் பகிர்ந்துகொண்டாள்.

அந்த கொடூரமான நிஜத்தைக் கேட்ட மீராவின் இதயம் நொறுங்கிப்போனது.
தன் கணவன் பாஸ்கரால் மனதளவிலும் உடலளவிலும் காயப்பட்டு, ஒருவித ஏக்கத்தில் தவிக்கும் மீராவுக்கு, கீதாவின் இந்தத் துயரம் தன் சொந்தத் துயரத்தை விடப் பெரியதாகத் தெரிந்தது.

அன்றுமுதல் இருவருக்கும் இடையே ஒரு ஆழமான அக்கா-தங்கைப் பிணைப்பு உருவானது. அருணையும் கீதாவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நாட்களிலெல்லாம், கீதாவின் குழந்தைகளைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போல மீரா மிகவும் பொறுப்புடனும் அன்படனும் பார்த்துக்கொண்டாள்.

மறுபுறம், அந்த பிளாக்கில் உள்ள ஆண்கள்—பாஸ்கர், ராஜேஷ், கார்த்திக், தினேஷ்—மாலை நேரங்களில் வாக் செல்லும்போதும், வீட்டின் கீழ் பகுதியில் சந்திக்கும்போதும் மெல்ல மெல்ல ஒன்றிணையத் தொடங்கினர்.

அவர்களது உரையாடல்களின் ஊடே, அருணின் அந்தத் தீவிரமான நோய் விவகாரம் மற்ற ஆண்களுக்கும் தெரியவந்தது.

அருணின் நிலமையைக் கேட்டு அவர்கள் மேலோட்டமாகப் பரிதாபப்பட்டாலும், அந்த ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த மனங்களுக்குள் ஒரு கொடூரமான காம எண்ணம் மெல்லத் துளிர்த்தது.

கீதாவின் பூரிப்பான உடலமைப்பும், அவளது சாந்தமான முகமும், அந்த நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கட்டுக்கோப்பான அழகும் ஏற்கனவே அந்த ஆண்களின் பார்வையில் பட்டிருந்தது.

"அவன் செத்ததுக்கு அப்புறம் இந்த பொண்ணை எப்படி வசப்படுத்துறது?"

"அவளுக்கு ஒரு ஆதரவு தேவைப்படும்போது நாம முன்னாடி போய் நின்னா... கீதாவை நமக்குச் சாதகமா பயன்படுத்திக்கலாம்," என்ற மிருகத்தனமான சிந்தனை, அருணின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நாலு ஆண்களின் மனதிலும் ரகசியமாக ஓடத் தொடங்கியது.

இதற்கிடையில், காட்வின் மற்றும் டயானாவின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய புயல் வெடித்தது.

திருமணமான நாளிலிருந்தே காட்வின் தன்னைத் தொடுவதைத் தவிர்ப்பதும், தனியாகச் முடங்குவதும், ஏதோ ஒரு பெரிய உண்மையை மறைப்பதும் டயானாவிற்குத் தாங்க முடியாத வேதனையைத் தந்தது.

அவளது பொறுமை எல்லை கடந்தது. ஒரு நாள் இரவு, அறைக் கதவை இறுக்கமாக மூடிய டயானா, காட்வினை நேருக்கு நேராக எதிர்கொண்டாள்.

"எனக்கு உண்மை தெரியணும் காட்வின்! என் தோற்றத்துல ஏதும் குறையா? இல்லை நான் உங்களுக்குப் பிடிக்கலையா? எதுவா இருந்தாலும் என் மூஞ்சியைப் பார்த்து ஓப்பனா சொல்லுங்க. இந்த அமைதியும் புறக்கணிப்பும் என்னைச் சாகடிக்குது!" என்று ஆவேசத்துடன் கத்தினாள்.

காட்வின் தன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான். அவளது கடுமையான அழுத்தமும், கேள்விகளும் அவனை முடுக்கின. இனி உண்மையை மறைக்க முடியாது என்ற நிலை வந்தபோது, அவன் தன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதான்.

"டயானா... என்னை மன்னிச்சிடு! என்னால எந்தப் பொண்ணையும் பொண்டாட்டியா பார்க்க முடியாது... நான்... நான் ஒரு கே (Gay)..."

அந்த வார்த்தைகள் அறையில் எதிரொலித்த நொடி, டயானா அதிர்ச்சியில் உறைந்துபோனாள். பூமி தன் காலடியில் இருந்து சரிவது போல இருந்தது.

தான் இத்தனை நாட்கள் கற்பனை செய்து வைத்திருந்த அத்தனை ஆசைகளும், திருமண வாழ்க்கையின் அழகிய கனவுகளும் ஒரே நொடியில் தூள் தூளாகி நொறுங்கின.

"என்ன சொன்னீங்க...?" அவளது குரல் நடுக்கத்துடன் வெளியே வந்தது.
தான் ஒரு கேடயமாகவும், வசதியான குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் கருவியாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற கொடூரமான நிஜம் அவளுக்குப் புரிந்தது.

"எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்! நான் இப்போதே என் வீட்டுக்குப்போறேன்!" என்று டயானா தன் உடைகளை எடுத்துப் பையில் அடைக்க முயன்றாள்.

காட்வின் அவளது கால்களில் விழுந்து கதறினான்.

"டயானா... தயவுசெய்து அப்படி பண்ணாத! என் அப்பா ரொம்பக் கொடூரமானவர். நீ இப்போ போனா என்னையும் என் காதலனையும் சாகடிச்சிடுவாரு. ஒரு ஆறு மாசம்... ஒரே ஆறு மாசம் எனக்கு டைம் குடு! அதுக்குள்ள எல்லாம் சரி பண்ணிட்டு, உன்னை மரியாதையா இந்த பந்தத்துல இருந்து விடுவிச்சுடுறேன். ப்ளீஸ்..." என்றான்.

கல்யாணத்துக்கு வாங்கிய கடன், ஊருக்கு சென்றால் தன் அம்மா அப்பாவுக்கு மேலும் சுமை என்ற எண்ணம். 6 மாதங்களுக்குள் அழைப்பாணை வந்துவிட்டால், வேலைக்கு சேர்ந்து தன்னைத் தானே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தவளால் சரியான முடிவெடுக்க இயலவில்லை.. வேண்டா வெறுப்பாக காட்வினின் வீட்டில் இருந்தாள்.

ஆனால், அதன் பிறகு, டயானாவுக்கு மாமனார்-மாமியார் மீது கடுமையான ஆத்திரமும் அருவருப்பும் வந்தது. ஒரு ஆணின் அடையாளத்தை மறைத்து, தன் வாழ்க்கையைப் பலிகடாவாக்கிய அந்தப் பெரிய மனிதர்களின் துரோகம் அவளது நெஞ்சைச் சுட்டெரித்தது. சிறிது சிறிதாக பிரச்சனைகள் உருவானது.

சில மாதங்களுக்கு பிறகு, அவள் காட்வினைப் பார்த்துத் தீர்க்கமாகச் சொன்னாள்:

"உங்க அப்பா அம்மா கூட என்னால ஒரு நொடி கூட வாழ முடியாது! அவங்க மூஞ்சியில நான் விழிக்கவும் விரும்பல. அதே நேரத்துல என் பெத்தவங்ககிட்ட போய் இப்போதைக்கு என்னாலப் பணம் கேட்க முடியாது."

அவள் தன் சுயமரியாதையைத் தூக்கிப் பிடித்தாள்.

"எனக்கு சென்னைல டிரெய்னிங் ஸ்டார்ட் ஆகி, முதல் மாசச் சம்பளம் வர்ற வரைக்கும் மட்டும்தான் நான் உன் கூட இருப்பேன். எனக்குச் சம்பளம் வந்த அடுத்த நிமிஷம், நான் உன்னை விட்டு நிரந்தரமா விலகிடுவேன்!"

காட்வின் வேறு வழியின்றி அவளது நிபந்தனைக்குத் தலைவணங்கினான்.
பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் தங்களது இந்த தற்காலிகமான நாடக வாழ்க்கையைத் தொடர, 'Block-D' குடியிருப்பில் உள்ள தங்களது புதிய வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.

வெளியே தம்பதிகளாக வலம் வந்தாலும், கதவுக்குப் பின்னால் அத்தனை ரகசியங்களையும், ஏக்கங்களையும், வஞ்சகங்களையும் அந்த 'Block-D' கட்டிடத்தின் வாழும் ஒவ்வொரு குடும்பமும் சுமந்தனர்!

Namaskar
இரவோவியன்
[+] 4 users Like iravoviyan's post
Like Reply
#26

Good Update Bro
Keep Rocking
Like Reply
#27

Superb
Like Reply
#28

Excellent updates
Like Reply
#29

09

டயானா தனது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவள் மற்றும் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அழைப்பாணைக்காக காத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட மீரா, புதிதாக கல்யாணமான பெண் போல அல்லாமல் பெரும்பாலும் சோகம் நிறைந்து காணப்படுகின்றன டயானாவை பார்க்கும் நேரங்களில், அவளிடம் மிகவும் பாசத்துடன் பழகத் தொடங்கியிருந்தாள். சொந்த ஊர் பாசம் இருவரையும் வேகமாக நெருங்க வைத்தது. டயானாவுக்கும் அந்தப் புதிய இடத்தில் மீராவின் அன்பு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.

ஒரு வார இறுதி நாளில், மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளை செய்ய கிளம்பிய அருணும் கீதாவும் வெளியே வந்தார்கள்.

அப்போது, டோர் நம்பர் 06-ல் வசிக்கும் காட்வினும் டயானாவும் பார்க்கிங் லாட் வந்தார்கள். டயானா ஒரு எளிய உடையிலும், காட்வின் எப்போதும்போல மிகவும் நாகரிகமான, ஸ்டைலான உடையிலும் இருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அருணின் கையைப் பிடித்தபடி மெல்லிய குரலில், "அருண், அங்க பாருங்களேன்... புதுசா வந்திருக்கிற அந்தப் பையனும் பொண்ணும் எவ்வளவு அழகா இருக்காங்க. ஜோடி சூப்பரா இருக்குல்ல?" என்று குறும்பாகச் சொன்னாள்.

இரண்டு ஜோடிகளும் எளிய புன்னகையுடன், பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

காட்வின் மற்றும் டயானாவை கூர்ந்து கவனித்த கணவனை, "என்ன அந்த பொண்ண விழுங்குவது போல பார்த்தீங்க" என கிண்டல் செய்தாள் கீதா..

அருண் தன் தலையை லேசாக அசைத்தபடி, "இல்ல கீதா... அங்க ஏதோ சரியில்ல. அந்தப் பொண்ணு முகத்துல கொஞ்சம் கூட சந்தோஷமே இல்ல. ரொம்ப இறுக்கமா இருக்கா. அதுமட்டுமில்ல... அந்தப் பையனைப் பார்த்தா ஒரு 'கே' (Gay) மாதிரி தெரியுது. நான் நினைக்கிறது தப்பா இருக்கணும்னு வேண்டிக்கிறேன்," என்றான்.

இதைக் கேட்டதும் கீதா அதிர்ச்சியில் கண்களை விரித்தாள். "அய்யோ அருண், என்ன பேசுறீங்க? பார்த்த உடனே யாரையும் அப்படித் தப்பா எடைபோடாதீங்க. அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க, ஏதாவது சின்னச் சண்டையா கூட இருக்கலாம்," என்று கணவனைக் கடிந்து கொண்டாள்.

ஹாஸ்பிட்டல் போகும் வழியிலும், வீட்டுக்கு வரும் வழியிலும் கணவன் சொன்ன விசயத்தை பற்றியே அதிகமாக சிந்தித்தாள் கீதா.

கணவன் அருண், வதந்திகளை பற்றிப் பேச விரும்பாதவன். அவ்வளவு எளிதாக பிறரைப் பற்றி பேசுபவனும் அல்ல என்பதால் அவன் சொல்வது உண்மையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்தாள்.

ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்த வேளையில், சிக்னலில் டயானா காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருப்பதையும், முன் சீட்டில் இன்னொரு ஆண் உட்கார்ந்திருப்பதையும் அருண்-கீதா தம்பதி பார்த்தார்கள்.

காட்வினின் முகத்தில் காலை இருந்த இறுக்கம் இப்போது கொஞ்சம் கூட இல்லை; அரவிந்தின் அருகில் அவன் மிகவும் உற்சாகமாகவும், இயல்பாகவும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தான். டயானாவோ வழக்கம் போல அமைதியாக தலையைக் குனிந்தபடி எதையும் கண்டு கொள்ளாதது போல இருந்தாள்.

மீண்டும் பார்க்கிங் பகுதியில் அதே போல நடந்தது. காட்வின் தனக்குத் தெரியாத யாரோ ஒருவர் போல நடந்து கொண்டாள் டயானா.

அந்த நேரத்தில் பிளாக்கின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்த பாஸ்கர் கண்களிலும் இந்தக் காட்சி பட்டது.

இரண்டு ஆண்கள் ஒரு அழகான இளம் பெண்ணும் ஒன்றாக அபார்ட்மெண்ட்டுக்குள் வருவதைப் பார்த்ததும், அவனின் வக்கிர புத்தி வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியது.

"புதுசா இன்னொருத்தன் போறான். செம ஜாலியான பார்ட்டிங்க போல... 'த்ரீசம்' (Threesome) மேட்டரா இருக்கும்!" என்று காமப் பார்வையுடன் புன்னகைத்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும், "கூடால வந்த பய்யன் யாரா இருக்கும்" என்ற கேள்வியை எழுப்பினாள் கீதா..

"காலையில நான் சொன்னேன்ல? கூட வந்திருக்கிற அந்தப் பையன், நிச்சயமா காட்வினோட காதலனாத்தான் இருக்கணும். அவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதத்தைப் பார்த்தாலே தெரியுது," என்றான் அருண்.

கீதா உடனே, "ச்சீ... அப்படி எல்லாம் பேசாதீங்க அருண். நமக்கு எதுக்கு அடுத்தவங்க விஷயம்?" என்று வாயளவில் கணவனைத் தடுத்தாலும், அவளது ஆழ்மனதில் அருண் சொன்னது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாகப் பதிந்துவிட்டது. டயானாவின் அந்த சோகமான முகமும், காட்வினின் மாற்றமும் அவளுக்கும் எதையோ உணர்த்தியது.

அன்று மாலை, கீதா வழக்கம்போல மீராவின் வீட்டிற்கு வந்திருந்தாள். ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க என இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு டயானாவின் பக்கம் திரும்பியது.

"மீரா... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா இதை வெளிய யார்கிட்டயும் சொல்லாதீங்க," என்று தயங்கியபடியே ஆரம்பித்த கீதா, காலையிலும் மதியமும் நடந்தவற்றையும், அருண் காட்வினைப் பற்றிச் சொன்ன விசயத்தை தானே கேட்பதைப் போல அந்த அதிர்ச்சிகரமான சந்தேகத்தையும் மீராவிடம் கொட்டித் தீர்த்தாள்.

அதைக் கேட்ட மீரா, "என்ன கீதா சொல்ற? நிஜமாவா?" என்றோ பெரிய அளவுக்கு அதிர்ச்சியை காட்டவில்லை. "அப்படியா நினைக்குற?" என்றாள்.
டயானாவுடன் பழகிய கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் மின்னலாய் ஓடின. டயானாவின் கண்களில் எப்போதும் தெரிந்த அந்த ஏக்கமும், கணவனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவள் பேச்சைத் திசைதிருப்பிய விதமும் மீராவுக்கு இப்போது தெளிவாகப் புரிந்திருந்நது.

"எனக்கும் முதல்ல இருந்தே அவங்க மேல ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சது கீதா... டயானா எப்பவுமே ஒரு மாதிரி தனிமையில தவிக்கிற மாதிரி இருப்பா. அவளோட அந்த அமைதிக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்குமா?" என்று மீரா வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள்.

​"நான் கூட முதல்ல என்ன நினைச்சேன் தெரியுமா கீதா?" என்று மீரா தொடர்ந்தாள்.

"இந்தக் காலத்துல லவ் பண்ணிப் பிரிஞ்ச ஜோடிகளை வலுக்கட்டாயமா வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களே... அப்படித்தான் இவங்க விஷயத்துலயும் நடந்துட்டதா நினைச்சேன். காட்வினுக்கு வேற யாரோ மேல லவ் இருந்திருக்கு, வீட்டுல மிரட்டி இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்காங்கனுதான் தப்பா நினைச்சுக்கிட்டேன். ஆனா, விஷயம் இவ்வளவு தூரம் பயங்கரமா இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல."

சிறிது நேரத்தில், தனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் வதந்திகளை பற்றி பேச விரும்பாத கணவன் அருண் சொன்ன விஷயம் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்டேன் என உண்மையை ஒத்துக் கொண்டாள் கீதா..

ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் அவங்கவங்க வாழ்க்கையில ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கு. அதுவும் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு எவ்வளவு வலிகளை உள்ளுக்குள்ளேயே புதைச்சு வச்சு வாழ்ந்துட்டு இருக்காங்க! வெளியே இருந்து பார்க்கும்போது அந்த வீடு பெருசு, வாழ்க்கை அமோகம்னு எல்லாரும் நினைப்பாங்க... ஆனா அந்த நாலு சுவருக்குள்ள நடக்குற நரகம் யாருக்குத் தெரியும்?" என்று மீரா தன் சொந்த வாழ்க்கையின் வாதைகளையும் சேர்த்து கூறினாள்.

​"கரெக்ட்... மனுஷங்களோட முகத்தைப் பார்த்து எதையுமே கணிக்க முடியாது. வெளியில ரொம்ப சந்தோஷமா சிரிக்கிறவங்க கூட உள்ளுக்குள்ள எவ்வளவோ புயலைத் தாங்கிட்டுத்தான் சுத்துறாங்க," என்று கீதா முணுமுணுத்தாள்.

​சிறிது நேரம் அந்த அறையில் ஒரு கனத்த மௌலம் நிலவியது.

​"இருந்தும் இல்லாம இருக்கிற வாழ்க்கை இருக்கே... அது ரொம்பக் கஷ்டம்ல கீதா?" என்று மீரா சொன்ன அந்த வார்த்தைகளில் மீரா-கீதா-டயானா என மூன்று பெண்ணின் ஏக்கமும் அந்த வார்த்தைகளில் அடங்கியிந்திருந்தது...

Namaskar
இரவோவியன்
[+] 1 user Likes iravoviyan's post
Like Reply
#30

Super update
Like Reply
#31

Very good
Like Reply
#32

Nice update

welcome *** உச்சம் தேவா ***  sex

உச்சம் தேவாவின் காம கதைகள்  >>>
Like Reply
#33

Keep going
Like Reply
#34

இது அபன்டெட் என்று வருகிறது என்ன காரணம்
Like Reply
#35

Good one
Like Reply
32,841 views




Users browsing this thread: 4 Guest(s)